ஆஸ்கர் விருது பட்டியலில் ஜோக்கர் திரைப்படம்! 11 பிரிவில் பரிந்துரை

  சாரா   | Last Modified : 15 Jan, 2020 02:53 pm
2020-oscars-nominations-joker-up-for-11-awards

92வது ஆஸ்கர் அகாடமி விருதுகள் அடுத்த மாசம் 9ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில், ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு ஹாலிவுட்டின் ஜோக்கர் திரைப்படம், ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட படங்களிலேயே அதிகபட்சமாக 11 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


உலகில் சினிமாவுக்கென்று வழங்கப்படும் மிக பெரிய விருதுகாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. லாஸ் ஏஞ்சலஸில் பிப்ரவரி 9ம் தேதி நடைபெற உள்ள விழாவில் கடந்த ஆண்டு வெளியான சிறந்த படங்கள், சிறந்த நடிகர்கள், கலைஞர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்படும். இந்நிலையில், கடந்த ஆண்டு வெளியான ஹாலிவுட்டின் ஜோக்கர் திரைப்படம், அதிகபட்சமாக 11 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஐரிஷ்மேன், ஒன்ஸ் அப் ஆன் எ டைம் இன் ஹாலிவுட், 1917 ஆகிய படங்கள் 10 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், ஜோக்கர் திரைப்படம், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த நடிகர் உட்பட 11 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஜோக்கர் கதாபாத்திரத்தில் நடித்த ஹாக்கின் ஃபீனிக்ஸ் சிறந்த நடிகருக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அடுத்தபடியாக தி ஐரிஷ் மேன், 1917 மற்றும் ’ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்’ ஆகிய திரைப்படங்கள் 10 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட், திரைப்படத்தில் நடித்த பிராட் பிட் சிறந்த துணை நடிகர் விருதுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

                                                                        


2019-ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான விருதை ‘போமேனியன் ராப்சோடி’ படத்துக்காக ராமி மலேக்கும், சிறந்த நடிகைக்கான விருதை தி ஃபேவரைட் திரைப்படத்துக்காக ஒலிவியா கோல்மேனும், சிறந்த இயக்குநருக்கான விருதை ‘ரோமா’ திரைப்படத்துக்காக அல்போன்சா குவாரனும் பெற்றனர். தி ஃபேவரைட், ரோமா ஆகிய திரைப்படங்கள் தலா 10 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்த நிலையில், ரோமாவுக்கு மட்டும் 3 விருதுகள் கிடைத்திருந்தது.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close