டிகிரி முடிச்சிருந்தா ரூ.56,000 சம்பளத்தில் அரசு வேலை! கடைசி தேதி அறிவிப்பு!

  சாரா   | Last Modified : 15 Jan, 2020 01:10 pm
jobs-in-chennai-co-operative-bank

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல் எல்லையாகக் கொண்டு செயல்படும் கீழ்காணும் தலைமை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

                                       
மொத்த காலியிடங்கள்: 300
சங்கத்தின் பெயர்: தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி, சென்னை-1
பணி: உதவியாளர் - 176
சம்பளம்: மாதம் ரூ.18,800 - 56500


சங்கத்தின் பெயர்: தமிழ்நாடு மாநில கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, சென்னை-4
பணி: உதவியாளர் - 57
சம்பளம்: மாதம் ரூ.13,000 - 45460


சங்கத்தின் பெயர்: தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம். சென்னை-18
பணி: உதவியாளர் - 58
சம்பளம்: மாதம் ரூ.15,000 - 62500


சங்கத்தின் பெயர்: தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம், சென்னை-10
பணி: இளநிலை உதவியாளர்- 06
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,8000


சங்கத்தின் பெயர்: தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம், சென்னை-93
பணி: இளநிலை உதவியாளர் - 03
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62000


வயதுவரம்பு: 01.01.2019 இன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் கூட்டுறவுப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னையில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் மேல் கூறப்பட்டுள்ள பணிகளில் பணியமர்த்தப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை:

ww.tncoopsrb.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை தங்களுடைய எதிர்கால பயன்பாட்டிற்கு ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மற்றும் மாற்றுத்திறனாளிகள், விதவை பிரிவுவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களும் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். ஆன்லைனிலும் செலுத்தலாம்.


மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.tncoopsrb.in/doc_pdf/Notification_1.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.02.2020

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 01.03.2020

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close