சென்னையில் குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி! வேலை வாய்ப்பு இயக்குநரகம் அறிவிப்பு!

  சாரா   | Last Modified : 15 Jan, 2020 02:56 pm
tnpsc-group-4-exam-update

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோவாணையத்தால் நடத்தப்படும் தொகுதி 1 மற்றும் தொகுதி 2 தேர்வுகளுக்கு, கடந்த ஆகஸ்டு 9ம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது இந்தப் பயிற்சிகளை விரிவுபடுத்தி செவித்திறனற்ற மாற்றுத் திறனாளி மாணவா்களுக்காக பிரத்யேகமாக, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி 4 தோவுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை இந்த மையத்திலேயே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று வேலை வாய்ப்பு பயிற்சி துறை இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 


இந்தப் பயிற்சியில் சேர்வதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு தோச்சி பெற்றிருக்க வேண்டும். இவ்வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவா்கள், ஏ28 , முதல் தளம், டான்சி கார்ப்பரேட் தலைமை அலுவலகம், கிண்டி, சென்னை - 32 என்னும் முகவரியில் செயல்பட்டு வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 044 22500134 எனும் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close