தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி!

  சாரா   | Last Modified : 15 Jan, 2020 02:46 pm
modi-s-pongal-wishes

இந்திய பிரதமர் மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு, தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருநாளையொட்டி பிரதமர் மோடி, அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழிலும், ஆங்கிலத்திலும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

 

பிரதமர் மோடி தெரிவித்துள்ள பொங்கல் வாழ்த்தில், "உலகம் முழுவதிலும் உள்ள துடிப்பு மிகு தமிழ் சமூகம் பொங்கல் திருநாளைக் கொண்டாடுகிறது. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். இத்திருநாள் அனைவரின் வாழ்வையும் எல்லையற்ற வளங்களால் நிரப்பிடட்டும். அனைவரும் சிறப்பான நல்வாழ்வு பெற்றிடட்டும்" என்று தெரிவித்துள்ளார்.  தமிழில் பிரதமர் தெரிவித்த பொங்கல் வாழ்த்துக்கு பலரும் லைக்ஸ், ரீ ட்வீட் செய்து வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close