மனைவியிடம் பேசியவரை அடித்துக் கொன்ற கணவன்! தமிழகத்தில் பரபரப்பு!

  முத்து   | Last Modified : 15 Jan, 2020 03:19 pm
husband-killed-who-speech-his-wife-in-ariyalur

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவர் அதே பகுதியை சேர்ந்த கொளஞ்சி என்பவரின் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கொளஞ்சி, தனது மனைவியிடம பேசியது குறித்து ரவியிடம் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. பின்னர் வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இது கைகலப்பாக மாறி கொளஞ்சி குடும்பத்தினர் ரவியை தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த ரவி சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் கொண்டுவரும் வழியிலேயே ரவி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மனைவியுடன் பேசியதைப் பார்த்து, பொறுக்க முடியாமல் கொலை செய்யும் அளவுக்கு சென்ற விபரீதம் குறித்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் கொளஞ்சி உள்ளிட்ட 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close