கதற கதற மயில் வேட்டை! துப்பாக்கியுடன் திரிந்த 3 இளைஞர்கள் கைது!

  முத்து   | Last Modified : 15 Jan, 2020 03:40 pm
three-person-arrested-for-peacock-hunting

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் காவல் நிலைய போலீசார் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரையும் பிடித்து விசாரித்தனர். அவர்களின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது போலீசாரின் கேள்விக்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.
இதனிடையே அவர்களிடம் நாட்டுத் துப்பாக்கி இருப்பது தெரிய வந்தது. அதைக் கொண்டு அவர்கள் மூன்று மயில்களை வேட்டையாடியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்ததில், மூன்று பேரும் பொன்னமராவதி பகுதியை சேர்ந்த பெருமாள், மூர்த்தி மற்றும் ஆறுமுகம் என்பது தெரிய வந்தது. 

பின்னர் இவர்கள் தொடர்பாக புதுக்கோட்டை வனத்துறை அலுவலர்களுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த வனத்துறை அலுவலர்கள் மூன்று பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த ஒரு நாட்டுத் துப்பாக்கி, வேட்டையாடப்பட்ட மூன்று மயில்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் தொடர்ந்து மயில் வேட்டையில் ஈடுபடுபவர்கள் பிடிக்கப்பட்டு வருவது வன அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த மயில்களை வேட்டையாடி இவர்கள் என்ன செய்கிறார்கள் என்கிற கோணத்தில் விசாரணை நடைப்பெற்று வருகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close