இளம்பெண்ணுடன் ஆற்றங்கரையில் உல்லாசம்! படுக்கையிலேயே கழுத்தை அறுத்த காதலன்!

  முத்து   | Last Modified : 15 Jan, 2020 03:55 pm
young-girl-murder-by-her-lover-when-they-doing-sexual-relationship

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள ஆண்டிவலசை பகுதியைச் சேர்ந்தவர் ஜோதிடர் கந்தசாமி. இவரது மகள் வெள்ளையம்மாளுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணமான மூன்று  மாதங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக கணவனைப் பிரிந்து தனது தாயார் வீட்டிற்கு சென்றார் வெள்ளையம்மா. 
இந்நிலையில் சில மாதங்களுக்கு பிறகு அதே பகுதியை சேர்ந்த முத்து என்ற ஜோதிடருக்கும் அப்பெண்ணிற்கும் இடையே  பழக்கம் ஏற்பட்டது . பின்னர் அது நாளடைவில் காதலாக மாறி இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர் .

அதே சமயம் ஜோதிடர் முத்து, வெள்ளையம்மாளிடம் அடிக்கடி பணம் பெற்று ஜாலியாக செலவழித்து வந்துள்ளார் . ஒருகட்டத்தில் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று வெள்ளையம்மாள் முத்துவிடம் வற்புறுத்தியுள்ளார். இதற்கு முத்து மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 11ம் தேதி திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கூறி வெள்ளையம்மாளை தனியாக அழைத்துச் சென்றுள்ளார் ஜோதிடர்.

திருச்சி அருகே உள்ள தொடையூருக்கு இருவரும் சென்றனர். அங்கு வெள்ளையம்மாளை ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்ற முத்து,  அவருடன் உல்லாசம் அனுபவித்துள்ளார். பின்னர்  அதே இடத்திலேயே தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெள்ளையம்மாளின்  கழுத்தை அறுத்து கொலை செய்தார் முத்து. அப்பெண்ணின் உடலை அங்கேயே புதைத்து விட்டு முத்து தலைமறைவானார்.  இந்நிலையில் தன்  மகளை காணவில்லை என தந்தை கந்தசாமி  போலீசில் புகார் கொடுத்தார் இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் காதலன் முத்து போலீசில் சரணடைந்தார். திருமணம் ஆன பெண்ணை திருட்டுத்தனமாக காதலித்து விட்டு, திருமணம் செய்ய வலியுறுத்தியதால் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close