டிக்டாக் காதலனால் கர்ப்பமான மாணவி!திருமணத்திற்கு மறுத்ததால் தற்கொலை! கதறியழும் பெற்றோர்!

  முத்து   | Last Modified : 15 Jan, 2020 04:31 pm
tiktok-love-school-girl-suicide

திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் டிக் டாக்கில் வீடியோக்கள் பதிவிட்டு அதில் மூழ்கியுள்ளார். இவரது வீடியோக்களை பார்த்த பல்லடத்தை சேர்ந்த வேல்முருகன் எனும் இளைஞர், சிறுமியுடன் நட்பாக பழகி வந்துள்ளார். இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து, வீட்டுக்கு தெரியாமல் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்திக்கும் போது திருமண ஆசை வார்த்தை கூறி சிறுமியை வேல்முருகன் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் ஒருகட்டத்தில் சிறுமி கர்ப்பம் அடைய, மகளின் நடவடிக்கையில் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இது தொடர்பாக சிறுமியிடம் பெற்றோர் விசாரித்ததால் மனஉளைச்சல் அடைந்த அவர், வேல்முருகனின் இது குறித்து கூறி விட்டு, தன்னைத் திருமணம் செய்துக் கொள்ள வற்புறுத்தியிருக்கிறார். திருமணத்திற்கு வேல்முருகன் சம்மதிக்காததாலும், பெற்றோர்கள் தொடர்ந்து விசாரித்ததாலும் ஏற்பட்ட மன உளைச்சலிலும், காதலன் ஏமாற்றிய விரக்தியிலும், வீட்டில் யாரும் இல்லாதப் போது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயைப் பற்ற வைத்துக் கொண்டார். பின்னர் அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு கோவை அரசு  மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து காங்கயம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது தன்னுடைய டிக் டாக் காதல் குறித்து சிறுமி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

இதனையடுத்து சிறுமியிடம் திருமணம் ஆசை கூறி பாலியல் பலாத்காரம் செய்த வேல்முருகனை போச்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இதனிடையே சிகிச்சை பலனின்றி பள்ளி மாணவி உயிரிழந்தார். இந்நிலையில் சிறை சென்றுள்ள வேல்முருகன் வெளியே வந்தால் தங்கள் உயிருக்கு ஆபத்து என்றும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் சிறுமியின் பெற்றோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அப்போது டிக்டாக்கை தடை செய்ய வேண்டும் என பதாகை ஏந்தி கோரிக்கை விடுத்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close