வாடிவாசலுக்கு காளையோடு தனியே வந்த இளம்பெண்! ஆச்சர்யத்தில் மூழ்கிய போட்டியாளர்கள்!

  சாரா   | Last Modified : 15 Jan, 2020 04:33 pm
women-alone-in-jallikattu

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இன்று தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று காலை முதலே களை கட்டி வருகின்றன. மதுரை அவனியாபுரத்தில் இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது.

இந்த போட்டிக்காக வாடிவாசலில் சீறிப்பாய 700 காளைகள் திமிலைக் காட்டிவாறு தயார் நிலையில் நின்றுக் கொண்டிருந்த சமயம், வாடிவாசலுக்கு இளம்பெண் ஒருவர், தன்னந்தனியாக, தான் செல்லமாக வளர்த்த காளையுடன் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்றது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. 

அந்த வீர தமிழச்சியின் காளை, சீறிப்பாய்ந்து வெளியே வந்து சிறிது நேரம் மாடுபிடி வீரர்களுக்குப் போக்கு காட்டியது. பின்னர், காளையை வீரர்கள் பிடித்த போதிலும், தான் வளர்த்த காளையோடு தனியே ஆர்வமாக வாடிவாசலுக்கு வந்து போட்டியில் பங்கேற்றதை ஊக்குவிக்கும் வகையில் அந்த பெண்ணுக்கு பட்டுச் சேலை ஒன்றை சிறப்பு பரிசாக அளித்து கெளரவித்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close