நகைக்கடைகளில் இனி ஹால்மார்க் தங்க நகைகள் மட்டுமே விற்பனை! அதிரடி அறிவிப்பு!

  சாரா   | Last Modified : 15 Jan, 2020 07:17 pm
hallmark-gold-from-2021-january

தங்க நகை விற்பனையாளர்கள் வரும் 2021 ஜனவரி 15ம் தேதி முதல், ஹால்மார்க் முத்திரை உள்ள நகைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் இன்று அறிவித்துள்ளார். தங்க நகை வர்த்தகத்தில் முறைகேடுகளை தடுப்பதற்காக மூன்று கிரேடுகளில் மட்டுமே தங்க நகை விற்பனை இனி செய்ய வேண்டும் என்ற நடைமுறையும் வரும்  ஜனவரி 2021 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையை செயல்படுத்த ஓராண்டு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம்விலாஸ் தெரிவித்துள்ளார்.

இந்த தங்க நகை ஹால்மார்க் கட்டாய நடைமுறை தொடர்பான அறிவிப்பு விரைவில், நுகர்வோர் விவகார அமைச்சகத்தால் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டம் நடைமுறை படுத்தப்பட்ட பின்பு ஹால்மார்க் முத்திரையுடன் 14, 18 மற்றும் 22 கேரட் நகைகளை மட்டுமே விற்க முடியும். இதையும் மீறி விற்பனை செய்தால் ஓராண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close