காஷ்மீரில் இந்திய வீரர்கள் சுட்டுக் கொலை! சக ராணுவ வீரரே சுட்டுக் கொன்ற கொடூரம்!

  முத்து   | Last Modified : 16 Jan, 2020 08:33 am
kashmir-two-cisf-personnel-killed-as-sentry-opens-fire

ஜம்மூ-காஷ்மீரின் உதாம்பூர் மாவட்டத்தில் உள்ள சுய் கிராமத்தில் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரின் முகாம் உள்ளது. இங்கிருந்த வீரர்களுக்கிடையே கடந்த 14ம் தேதி வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் பொறுமையை இழந்த வீரர் ஒருவர், சக வீரர்களின் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படையை சேர்ந்த பி.என்.மூர்த்தி மற்றும் முகமது தஸ்லீம் ஆகியோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வீரரான சஞ்சய் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர், சக வீரர்கள் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close