தாயை கொலை செய்த இளம்நடிகை! அதிர்ச்சியில் திரையுலகம்!!

  முத்து   | Last Modified : 16 Jan, 2020 08:27 am
hollywood-actress-molli-bits-did-murder-her-mother

கேப்டன் அமெரிக்கா, தி பஸ்ட் அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் நடித்து  பிரபலமானவர் மோலி பிட்ஸ். ஆரம்பத்தில் துணை இயக்குனராக இருந்த இவர்,  தனியாக படங்களை தயாரிப்பது மற்றும் படங்களை இயக்குவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்தார்.  இந்நிலையில் கடந்த மாதம் மோலியின் தாய் பெட்ரிஷியா பிட்ஸ் ஜெரால்டு (68) என்பவர் கன்சாஸ் பகுதியில்  கொலை செய்யப்பட்டு கிடந்தார். உடனே அங்கு சென்ற போலீசாருக்கு மிகுந்த அதிர்ச்சி காத்திருந்தது. பெட்ரிஷியா வின் சடலத்துக்கு அருகிலேயே நடிகை மோலி பீட்ஸ்சும்  படுகாயமடைந்த  நிலையில் கிடந்தார்.

மோலி பிட்சை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் காவல்துறையினர் விசாரணையில், நடிகை மோலி பிட்ஸ்தான் அவரது தாயை கொலை செய்தார் என தெரியவந்தது. மருத்துவமனையில்  சிகிச்சை முடிந்த நிலையில் மோலியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது ஹாலிவுட்டில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து விசாரணை நடந்து வரும் நிலையில்,  தாயை மோலி ஏன் கொன்றார் என்பது தெரியவில்லை. தாய் பேட்ரிஷியா பல ஆண்டுகளாக ஆஸ்டின் நகரில் தனது மகனுடன் வசித்து வந்த நிலையில், கன்சாஸ் நகரில் குடியேற முடிவு செய்த நிலையில் தனது சொந்த மகளாலேயே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.  இக்கொலைக்கான  காரணம் குறித்து மோலி பிட்ஸிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை  நடந்து வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close