உயிருக்கே ஆபத்து..! பீதியைக் கிளப்பி செல்போன்களை திருடிய நபர் கைது

  முத்து   | Last Modified : 16 Jan, 2020 07:10 am
cell-phone-radiation-too-high-man-arrested-stealing-cell-phones

சென்னை அண்ணாநகர், ஓ.எம்.ஆர் பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில் அடிக்கடி செல்போன் திருடுபோவதாக போலீசாருக்கு புகார்கள் குவிந்தன. இதனையடுத்து பெண்கள் ஹாஸ்டலில் இருந்து கைப்பற்றப்பட்ட வீடியோக்களை ஆய்வு செய்தபோது ஹெல்மெட் அணிந்தபடி ஒரு நபர் வந்து சென்றது தெரிந்தது. அவர் வந்து சென்ற பிறகே செல்போன் திருட்டு நடந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக ஹாஸ்டல் உரிமையாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அதிகாலை நேரத்தில் நிறைய பெண்கள் வேலைக்கு புறப்படத் தயாராகி வருவார்கள். அறையை ஷேர் செய்து தங்கும் பெண்கள் சிலர் தூக்கத்தில் இருப்பார்கள். இதனால், பல அறைகள் பூட்டப்படாமல் திறந்தே இருக்கும். அந்த பரபரப்பான நேரத்தில் ஹெல்மெட் அணிந்தபடி ஒரு நபர் வந்தார். தான் தனியார் செல்போன் தொலைத்தொடர்பு நிறுவனத்திலிருந்து வருவதாகவும் இந்த பகுதியில் உள்ள டவரில் அதிக கதிர்வீச்சு இருப்பதாக புகார் வந்துள்ளது என்றும் அதை செக் செய்ய வந்துள்ளதாக கூறுவார்.

மேலும், கையில் உள்ள கருவியைக் காட்டி இங்கு செல்போன் டவர் ரேடியேஷன் அபாய கட்டத்தைக் காட்டுகிறது என்றும் சொல்லியுள்ளார். இதனால் ஹாஸ்டல் நிர்வாகிகள் பயந்துபோய் அவரை உள்ளே அனுமதித்துள்ளனர். ரேடியேஷன் அதிகமாக உள்ளதால் அதை சரி செய்யும் வரை வெளியே வர வேண்டாம் என்று அந்நபர் அச்சுறுத்தியுள்ளார். இதனால் அவர்கள் அறையில் இருந்த நேரம் விடுதியில் திறந்திருக்கும் அறைகளில் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், நொளம்பூர் பகுதியில் உள்ள லேடீஸ் ஹாஸ்டலில் இருந்து போலீசாருக்கு போன் வந்தது. உடனே, விரைந்து சென்று அந்த நபரை போலீசார் மடக்கிப் பிடித்த போலீசார் விசாரணையில் அவர் பாலாஜி என்றும் சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது. இது போன்று பல லேடீஸ் ஹாஸ்டலில் திருடியதும் தெரியவந்தது. அவர் அளித்த தகவல் அடிப்படையில் அவரது கூட்டாளி சாகுல் கைது செய்யப்பட்டார். இவர்களிடம் இருந்து 34 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close