பிள்ளைகளை மலை உச்சியில் இருந்து வீசிக்கொன்ற கொடூர தந்தை - குண்டர் சட்டத்தில் கைது

  முத்து   | Last Modified : 16 Jan, 2020 07:23 am
father-killed-his-own-son-and-daughter-police-arrested-him-by-gundas

நாமக்கல் மாவட்டம் அரசம்பட்டி பகுதியில் வசிக்கின்றனர் சிரஞ்சீவி - பாக்கியம் தம்பதியர். இவர்களுக்கு கிரிதாஸ் என்ற மகனும் (8), கவிதாரணி என்ற மகளும் (5) இருந்தனர். இந்நிலையில் சிரஞ்சீவி தனது மனைவி பாக்கியத்துடன் அவ்வப்போது தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் தகராறு முற்றியதால் ஆத்திரமடைந்த சிரஞ்சீவி, செம்மேடு சீக்குபாறை பகுதியில் அமைந்துள்ள வியூ பாயிண்ட்க்கு தனது பிள்ளைகளை அழைத்துச் சென்று சுமார் 250 அடி பள்ளத்தில் தூக்கி வீசி கொலை செய்தார்.

குழந்தைகள் காணாமல் போனதைத் தொடர்ந்து, கணவனின் நடத்தையில் சந்தேகமடைந்த மனைவி பாக்கியம் கொல்லிமலை வாழவந்தி நாடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், சிரஞ்சீவியை விசாரித்து உண்மையை கண்டறிந்தனர். பின்னர் அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் உதவியுடன் போலீஸார் குழந்தைகளின் சடலத்தை மீட்டனர்.

அத்துடன் சிரஞ்சீவியை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இரண்டு குழந்தைகளையும் கொலை செய்த சிரஞ்சீவியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசுவின் பரிந்துரையின் படி, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் மெகராஜ் உத்தரவிட்டார். அதன்படி, சேலம் மத்திய சிறையில் உள்ள சிரஞ்சீவியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close