''நீதிமன்ற தீர்ப்பை நான் ஏன் மதிக்க வேண்டும்..!''  - தந்தை, மகள் வெட்டிக்கொலை

  முத்து   | Last Modified : 16 Jan, 2020 07:45 am
father-and-daughter-were-brutally-murdered-in-tirunelveli

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் வேடுவார் காலனியைச் சேர்ந்தவர் தங்கமுத்து. இவருக்கு மூன்று மகள்கள், இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது வீட்டின் அருகே ஜெயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இருவருக்கும் இடையே காம்பவுண்ட் சுவர் தொடர்பாக பிரச்சனை இருந்துள்ளது. இதுதொடர்பாக இருவரும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். அதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்கமுத்துவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதனால் பக்கத்துவீட்டுக்காரர் ஜெயராஜ் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு வீட்டை சுத்தம் செய்து வெள்ளையடிக்கும் பணியில் தங்கமுத்து ஈடுபட்டு இருந்துள்ளார். அவருக்கு உதவிக்காக மூத்த மகள் சுமதி தனது 12 வயது மகன் ஜெகதீஷுடன் வந்துள்ளார். 

அப்போது அங்கே வந்த ஜெயராஜும் அவரது இரு மகன்களும் வீட்டில் வெள்ளையடித்துக்கொண்டு இருந்தவர்களிடம் தகராறு செய்துள்ளனர். பின்னர் சுமதியின் தலை மீது சுண்ணாம்பு கரைசலை கொட்டியுள்ளனர். மேலும் வீட்டுக்குள் இருந்த தங்கமுத்துவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். பின்னர் சுண்ணாம்புக் கரைசல் கண்ணில் விழுந்து துடித்துக்கொண்டிருந்த சுமதியை அவரது மகன் கண்முன்னே கல்லால் அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

இதனிடையே கொலை செய்துவிட்டு தப்பியோடியவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். பட்டப்பகலில் பொங்கல் பண்டிகை அன்று மகன் கண்முன்னே தாய், தாத்தா கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரே இந்த கொடூர கொலைகள் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சி அடையச் செய்கிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close