மனைவி இறந்தால் சொத்துக்கள் யாருக்கு? நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

  சாரா   | Last Modified : 16 Jan, 2020 07:23 pm
if-the-married-woman-dies-her-mother-cannot-be-considered-as-legal-heir

திருமணமான பெண் இறந்தால், அவரது தாய் சட்டப்பூர்வ வாரிசாக முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

சென்னையை சேர்ந்த கிருஷ்ணா என்பவரது மனைவி விஜயநாகலட்சுமி கடந்த 2013ம் ஆண்டு இறந்த நிலையில், வாரிசு சான்றிதழில் அவரது தாயார் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் கிருஷ்ணா தொடுத்த வழக்கில் நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பெண்கள் இறந்தால் அவரது கணவர், குழந்தைகள் மட்டுமே சட்டப்பூர்வ வாரிசாக முடியுமென கூறினார்.

                                         

அதே திருமணமான ஆண் இறந்துவிட்டால் அவரது குழந்தை,மனைவி மற்றும் அவரது தாய் சட்டபூர்வமாக வாரிசுகளாக கருதப்படுவார்கள். இது மணமான ஆணுக்கு மட்டுமே பொருந்தும் என கூறினார்

மேலும் விஜயநாகலட்சுமியின் வாரிசு சான்றிதழை ரத்து செய்ததோடு, புதிய வாரிசு சான்றிதழை (அவரது தாயார் பெயர் நீக்கப்பட்டு) பிப்.15ம் தேதிக்குள் வழங்கவும் உத்தரவிட்டார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close