முன்னாள் மத்திய அமைச்சருக்கு தந்தை பெரியார் விருது!

  சாரா   | Last Modified : 16 Jan, 2020 03:07 pm
periyar-award-announced-for-senji-ramachandran

தமிழக அரசின் தந்தை பெரியார் விருது, மூத்த அரசியல்வாதியும், முன்னாள் மத்திய அமைச்சருமான செஞ்சி ராமச்சந்திரனுக்கு வழங்கப்படுவதாக அறிவிப்பு . தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த விருதுடன் 1 லட்சம் ரூபாய் ரொக்கம், ஒரு சவரனில் தங்க பதக்கம் ஆகியவை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது மாநில அரசு சார்பில் ஆண்டுதோறும் ஒருவருக்கு வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டுக்கான பெரியார் விருது அறிவிக்கப்படாதது குறித்து ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில், இந்த விருது அறிவிப்பு வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

                                     

யார் இந்த செஞ்சி ராமச்சந்திரன்?
திமுகவில் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த செஞ்சி ராமச்சந்திரன், திமுகவிலிருந்து விலகி வைகோ மதிமுகவை தொடங்கிய போது அவருடன் இணைந்தார். பின் வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார். இதனைத் தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்னர் அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் செஞ்சி ராமச்சந்திரன் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close