அது வேஸ்ட் லக்கேஜ் தான்! ஸ்டாலின் மனசாட்சியாக செயல்பட்ட துரைமுருகன்!

  சாரா   | Last Modified : 17 Jan, 2020 04:41 pm
duraimurugan-speech

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு இடையே அவ்வபோது உரசல்களிருந்த போதிலும் வெளியே காட்டிக் கொள்வதில்லை. தற்போது இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது.

டெல்லியில் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி கூட்டிய அனைத்துக் கட்சி கூட்ட ஆலோசனையில் பங்கேற்காமல் ஒதுங்கத் துவங்கும் போதே திமுக வட்டாரத்தில், காங்கிரஸ் கட்சியைக் கழற்றி விட முடிவெடுத்து விட்டார்கள். உள்ளாட்சி தேர்தல் வரையில் அடக்கி வாசிக்கலாம். எத்தனை இடங்களில் நாம் சீட் கொடுக்கிறோமோ அவற்றில் மட்டும் தான் காங்கிரஸ் கட்சி எந்தவித நிபந்தனையுமின்றி நிற்க வேண்டும் என்று திமுக ஏற்கெனவே முடிவெடுத்தும் இருந்த நிலையில், தற்போது இருகட்சியினரும் மாறி மாறி குற்றசாட்டுகளை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் அழகிரி, திமுகவின் செயல்பாடு குறித்து வெளியிட்ட அறிக்கை மேலும் புகைச்சலை ஏற்படுத்தியது. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிச்சென்றாலும் எங்களுக்கு கவலை இல்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் பேட்டியளித்துள்ளார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒட்டே கிடையாது எனவும், அதனால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், காங்கிரஸ் கட்சி என்பது கூட்டணியில் வேஸ்ட் லக்கேஜ் தான் என்றும்  துரைமுருகன் தெரிவித்திருந்த கருத்து சலசலப்பை ஏற்படுத்தினாலும், கலைஞர் காலத்தில் இருந்தே துரைமுருகன் தானாக எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்க மாட்டார் என்றும், கலைஞரின் மனசாட்சியாக இதுநாள் வரையில் இருந்த துரைமுருகன் இப்போது ஸ்டாலின் எண்ணுவதை தனது வார்த்தைகளில் பிரதிபலிக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் துரைமுருகன் மகன் போட்டியிட்டு எம்.பி.யாக வென்றுள்ள நிலையில், ப.சிதம்பரத்தின் மகன்  கார்த்தி சிதம்பரம், ஆவேசமாக, ‘துரைமுருகன் இந்த கருத்தை, தைரியமிருந்தால் வேலூர் தேர்தலுக்கு முன்பாக சொல்லியிருக்க வேண்டும்’ என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

உண்மையில், தமிழகத்தில் இப்போது சரியான தலைமைக்கு மட்டும் வெற்றிடம் உருவாகியிருக்கவில்லை. அனைத்து கட்சியிலுமே தலைவர்களுக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னர் தமிழகத்தின் அரசியல் கட்சிகளுக்குள் ஒரு கூட்டு மனப்பான்மை இருந்தது. ஆனால், இப்போது எந்த கட்சியினருக்குள்ளும் ஒற்றுமை கிடையாது. அதிமுகவில் எப்படி ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். அணி என்று மேலோட்டமாக ஒட்டிக் கொண்டு உறவாடுகிறார்களோ அதே போல், சத்தமில்லாமல் அமைச்சர் ஜெயக்குமார் பின்னாலும் ஒரு அணி இயங்கி வருகிறது. திமுகவிலும் ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி, அன்பழகன் என்று அனைவருமே தனித்தனியாக ஒரு வட்டத்தைப் போட்டுக் கொண்டு, அந்த வட்டத்திற்குள் நெருக்கமானவர்களை மட்டுமே அனுமதித்து வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியில் தமிழக தலைவராக யார் வந்தாலும், பிற கோஷ்டிகளில் இருந்து அவர் எப்போதுமே தனித்தே விடப்படுவார். தமிழக காங்கிரஸுக்கும், ப.சிதம்பரத்துக்கும் எப்போதுமே தொடர்புகள் இருந்ததில்லை. எது பேசுவதாக இருந்தாலும் எப்போதுமே டெல்லி வட்டாரங்களில் தான் தொடர்புகொள்வார் சிதம்பரம்.

வரும் சட்டசபைத் தேர்தலுக்குள் காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம், திருமா கூட்டணி அமைவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக சொல்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். ஆமாம், காங்கிரஸை அடுத்து, திருமாவையும் கழற்றிவிட  முடிவு செய்திருக்கிறார்கள் அறிவாலயத்தினர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close