காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாடுங்க! அவசர உதவிக்கு இதை ஞாபகத்துல வெச்சுக்கோங்க!

  சாரா   | Last Modified : 16 Jan, 2020 06:27 pm
missing-persons-helpline

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். நாளை பொங்கல் திருவிழாவின் தொடர்ச்சியான காணும் பொங்கல் என்பதால், அனைவரும் குடும்பத்துடன் தங்களது நண்பர்களையும், உறவினர்களையும் கண்டு, அகமகிழ்ந்து சந்தோஷத்தில் திளைத்திருப்பர். 

சென்னையில் பொழுதுபோக்கு இடங்கள் அனைத்தும் ஜன நெரிசலில் நாளை திணறும் என்பதால், அந்த ஜன சந்தடியில் விலாசங்களைத் தொலைத்தும், உடன் வந்த நண்பர்களையும், உறவினர்களையும் கூட்டத்தில் மிஸ் செய்பவர்களுக்கும் உதவும் வகையில் புது சேவையைத் துவங்கியிருக்கின்றன ஹலோ கேர்.

கடற்கரை உள்ளிட்ட பல சுற்றுலா தளங்களுக்குச் செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும் போது குழந்தைகள், முதியவர்கள் கூட்ட நெரிசல்களில் சிக்கி தொலைந்து போயிருந்தால், உங்கள் அன்புக்குரிய நண்பர்களையோ, உறவினர்களையோ கண்டுப்பிடிக்க @helo கேர் எடுத்துள்ள முன்னெடுப்பு தான் #தேடும் பொங்கல். 

இதன் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையில்  தொலைந்து போகின்றவர்களை @sixth sense foundation மற்றும் சென்னை காவல்துறை உதவியுடன் கண்டுபிடிக்க @helo கேர் உதவ முன்வந்துள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் அங்குள்ள தன்னார்வ அமைப்புகளுடன் சேர்ந்து இந்த பணியை மேற்கொள்கிறது Helo. கூட்ட நெரிசலில், உங்கள் அன்புக்குரியவர்கள் தொலைந்து போனால் அவர்களின் விவரங்கள் மற்றும் புகைப்படங்களை #தேடும் பொங்கல், #Helo கேர் எனும் hashtag பயன்படுத்தி பதிவிடுங்கள். உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம் என்கிறார்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close