10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை! கட்டிட தொழிலாளி கைது!

  முத்து   | Last Modified : 17 Jan, 2020 12:35 pm
one-arrested-on-pocso-act

சென்னை அடுத்த ஓட்டேரி குன்னூர் நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்தவர் புஷ்பவல்லி (47). கணவரை இழந்த இவர், அதே பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார். இவரது மகள் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம்  இரவு கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மகள் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த புஷ்பவல்லி தனது வீட்டின் அருகே தேடிப் பார்த்தார். ஆனால், கிடைக்கவில்லை. வெகுநேரம் கழித்து வந்த மகளிடம் விசாரித்த போது, அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி செல்வம் (32) என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார்.

தனது மகளுக்கு நிகழ்ந்த கொடுமை குறித்து மாணவியின் தாய் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனையடுத்து போலீசார் செல்வத்தை பிடித்து விசாரணை நடத்தியப்போது அவர் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதி செய்யப்பட்டது. பின்னர் செல்வத்தை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close