பேருந்து ஓட்டிக் கொண்டே பேஸ்புக் பார்த்த டிரைவர்! வைரலாகும் வீடியோ!!

  முத்து   | Last Modified : 17 Jan, 2020 12:21 pm
bus-driver-using-cell-phone-while-driving

திண்டுக்கல் பழனியில் செல்போனை பார்த்தபடி தனியார் பேருந்து ஓட்டுநர் பேருந்து ஓட்டிய வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

 


பழனியில் இருந்து திண்டுக்கல் வழியாக செந்துறை செல்லக்கூடிய தனியார் பேருந்தை ராமகிருஷ்ணன் என்ற ஓட்டுநர் ஓட்டிச் சென்றார். அப்போது தன்னுடைய செல்போனை பார்த்த படி பேருந்தை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். ஓட்டுநரின் அலட்சியமான செயல்களால் அச்சம் அடைந்த பயணிகள் ஓட்டுநரை கண்டித்துள்ளனர்.

பயணிகள் கண்டித்தும் கண்டுகொள்ளாத ஓட்டுநர் ராமகிருஷ்ணன் கையில் ஆண்ட்ராய்ட் செல்போனை வைத்துக்கொண்டு போஸ்புக், வாட்ஸ்ஆப் பார்த்தபடி பேருந்தை தொடர்ந்து ஓட்டியுள்ளார். இந்நிலையில் ஓட்டுநரின் செயலை செல்போனில் படம் பிடித்த பயணி ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தவீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. பயணிகளின் உயிரை பற்றிய கவலையில்லாமல் பேருந்தை அஜாக்கரதையாக இயக்கிய ஓட்டுநர் மீது வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close