விமானத்துல இதயம், ஹெலிகாப்டர்ல கல்லீரல்.. இறந்தும் 8 பேரை வாழ வைத்த இளைஞர்!!

  முத்து   | Last Modified : 17 Jan, 2020 12:06 pm
donate-the-body-parts-of-the-youth

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காந்தி நகரைச் சேர்ந்த வெற்றிவேல்,  ராஜேஸ்வரி மகன் சரத்குமார்(23). இவர் சிவகங்கையில் தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார். ஜனவரி 11ம் தேதி பணி முடிந்து வழக்கம் போல் இளையான்குடி ரோடு வழியாக பைக்கில் பரமக்குடிக்கு வந்தார். அப்போது அதிகரை விலக்கு ரோட்டில் நிலைதடுமாறி பைக் விபத்துக்குள்ளானது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் பலத்த காயத்துடன் அவரை மீட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் ஏற்கனவே மூளைச்சாவு அடைந்து விட்டதாக பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சரத்குமாரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் சம்மதித்தனர்.

மதுரை, சென்னை மருத்துவக்கல்லுாரி டீன்கள் மூலம் உடலுறுப்புகள் எடுக்கப்பட்டது. இதயம் விமானம் மூலம் சென்னைக்கும், கண்கள் திருச்சிக்கும், சிறுநீரகங்கள் மதுரை, தஞ்சாவூருக்கும் வழங்கப்பட்டது. இதன்மூலம் எட்டு பேர் மறுவாழ்வு பெற்று உள்ளனர். சரத்குமாரின் கல்லீரல் கோவை மெடிக்கல் சென்டரில் உள்ள நோயாளிக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் 30 நிமிடங்களில், மதுரையில் இருந்து கோவைக்கு கல்லீரல் எடுத்து வரப்பட்டது. கோவை வட்டமலையாம் பாளையத்தில் தரையிறங்கி அங்கிருந்து கல்லீரல் வாகனம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. வழிநெடுகிலும், போக்குவரத்தை போலீசார் நிறுத்தி தடையின்றி செல்ல வழி செய்தனர்.

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close