நிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்!

  சாரா   | Last Modified : 17 Jan, 2020 12:33 pm
president-reject-nirbhaya-plea-case

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேர் தூக்கு கயிறை எதிர்கொண்டு உள்ளனர். குற்றவாளிகள் 4 பேரையும் வரும் 22ஆம் தேதி தூக்கில் போடுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அதற்கான ஏற்பாடுகளில் திகார் சிறைத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, தனது தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி 4 குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் கருணை மனு அனுப்பினார்.

இந்த கருணை மனுவை டெல்லி துணை நிலை ஆளுநர் நிராகரித்து, அதனை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார். அந்த மனுவை உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருந்தது. அதில், முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரிக்கும்படி குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

                                    

மறுசீராய்வு மனுக்கள், மரண தண்டனையை எதிர்த்து வழக்கு, கருணை மனு என தண்டனையை தள்ளிப்போடுவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக மாணவி நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி அதிருப்தி அடைந்துள்ளார். நிர்பயா மரணத்தை வைத்து அரசியல் விளையாட்டு விளையாடுவதாகவும், 2012ல் யார் யார் எல்லாம் நிர்பயாவுக்காக போராடினார்களோ, அவர்களே இப்போது அரசியல் லாபத்துக்காக விளையாடுவதாகவும் ஆஷா தேவி கூறினார். 

முன்னதாக குற்றவாளிகளின் கருணை மனுவை டெல்லி ஆளுநர் நிராகரித்த நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் கருணை மனுவை நிரகாரித்துள்ளார். இந்நிலையில், நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் இம்மாதம் 22ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close