நிர்பயா குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1ந்தேதி தூக்கு தண்டனை உறுதி!

  சாரா   | Last Modified : 17 Jan, 2020 05:11 pm
nirbaya-case-culprits-willbe-hanged-on-february-1st

தலைநகர் டெல்லியில்,  பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு, ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு கொலைச் செய்யப்பட்ட மருத்துவ மாணவி நிர்பயா வழக்கில், குற்றவாளிகளுக்கு ஜனவரி 22ம் தேதி தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. பின்னர் தங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று குற்றவாளிகள் குடியரசு தலைவருக்கு கருணை மனு அனுப்பியிருந்த நிலையில், இவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா என்கிற அச்சம் ஏற்பட்டது. இது குறித்து பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது அதிருப்தியைத் தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில், குற்றவாளிகள் அனுப்பிய கருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்தார். குற்றவாளிகள் நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை உறுதியானது.


இந்நிலையில், ஜனவரி 22ம் தேதி தூக்கிலிடப்படுவதாக இருந்த தேதி, தற்போது மாற்றிவைக்கப்பட்டு, புதிதாக டெல்லி நீதிமன்றம், பிப்ரவரி 1ம் தேதி காலை 6 மணிக்கு குற்றவாளிகள் நால்வரையும் தூக்கிலிடுவதற்கு உத்தரவிட்டுள்ளது.

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close