நான் ரப்பர் ஸ்டாம்ப் கிடையாது.. எனக்கு மூளை உள்ளது’ ஆளுநரின் தடாலடி பேச்சு!

  சாரா   | Last Modified : 17 Jan, 2020 07:00 pm
kerala-governor-speech

கேரள மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்து கேரள அமைச்சரவை அவசரச் சட்டம் நிறைவேற்றியது. இந்த சட்டத்தில்  அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கையெழுத்திட மறுத்துள்ளதாக கேரள ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

இது குறித்து, ஆளுநர் ஆரிஃப் முகமது கானிடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, நான் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் ஆக மட்டும் இருந்தால்  அதற்கு ஜனநாயகம் ஒப்புக் கொள்ளாது என்றும்,  எனக்கென்று சொந்தமாக மூளை உள்ளது. மாநில அரசின் ஒவ்வொரு முடிவிலும்  ஆளுநராகிய நான் சிந்தித்து செயல்பட வேண்டியுள்ளது. எனவே ஒவ்வொரு அவசரச் சட்டத்தின் போதும் அதில் உள்ளவற்றை தெரிந்துக் கொள்ள போதுமான கால அவகாசம் தேவைப்படுகிறது என்றார். மேலும், கேரள சட்டப்பேரவை விரைவில் கூடவுள்ள நிலையில், உள்ளாட்சி அமைப்புகளை அதிகரிக்கும் அவசரச் சட்டத்துக்கான உடனடி தேவை என்ன? என்றும்,  இது தொடர்பான கேள்விகளை எழுப்பி, அதற்கான விளக்கங்களை மாநில அரசிடம் கோரியுள்ளேன். அதன் பிறகு தான் இந்த விவகாரத்தில் சிந்தித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

இந்த அவசரச் சட்டத்தில் நான்  கையெழுத்திட மாட்டேன் என்று ஒரு போதும் சொல்லவில்லை என்றும் தெரிவித்தார். கேரளாவில், ஆளுநரின் இந்த நடவடிக்கை, ஒட்டுமொத்த இந்தியாவையுமே கேரளாவை உற்று நோக்க வைத்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close