1000 கோடி செலவில் அம்பேத்கருக்கு சிலை! 450 அடி உயரத்தில் பிரம்மாண்டம்!

  சாரா   | Last Modified : 18 Jan, 2020 07:34 am
ambedkar-memorial-s-height-to-be-increased-by-100-feet

இந்திய அரசியல் அமைப்பின் சிற்பி அம்பேத்கருக்கு மகாராஷ்டிர மாநிலத்தில்  வெண்கலச் சிலை அமைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

அம்பேத்கருக்கு அமைக்கப்படவுள்ள இந்த சிலை, மகாராஷ்டிர மாநிலத்தின் தாதர் பகுதியில் உள்ள இந்து மில்ஸின் 12 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட இருக்கிறது. இந்த அம்பேத்காரின் சிலையானது  250 அடி உயரத்தில்  அமைக்கலாம் என பரிந்துரைக்கப்பட்ட நிலையில், தற்போது சிலையின் உயரத்தை 350 அடியாக அதிகரிக்க  முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அம்பேத்கரின் சிலைக்கு கீழ் பகுதியில் 100 அடி உயரத்திற்கு அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு நினைவகம் உள்ளிட்டவையும்  அமைக்கப்படவுள்ளது, எனவே, இந்த அம்பேத்கர் சிலையின் மொத்த உயரம் 450 அடி வரை இருக்கும். இந்த சிலையை முழுவதுமாக நினைவகம் உட்பட, கட்டி முடிப்பதற்கு 2 வருடங்கள்  ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆரம்பத்தில் ரூ.763 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது  இந்த திட்டத்தின் மதிப்பீடு ரூ. 1,069.95 கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close