3வது மாடியிலிருந்து இளம்பெண் தற்கொலை! ஏர் இந்தியா நிறுவனம் காரணமா? போலீசார் விசாரணை!!

  சாரா   | Last Modified : 17 Jan, 2020 07:25 pm
air-india-staff-falls-to-death-suicide-suspected

தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில், சம்சதாபாத் பகுதியில் வசித்து வந்த இளம் பெண் சிம்ரன்(22). இவர் அந்தப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மூன்றாவது தளத்தில் வசித்து வந்ஹ்டார். ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ்காந்தி சர்வதேச விமான நிலையத்தில், ஏர் இந்தியா நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை அலுவலராக சிம்ரன் பணியாற்றி வந்தார்.

சம்பவத்தன்று திடீரென யாரும் எதிர்பார்க்காத வேளையில், மூன்றாவது மாடியிலிருந்த தன் வீட்டின் பால்கனியில் இருந்து சிம்ரன் தரையில் தலைகீழாக விழுந்தார். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்ப்பதற்குள்ளாகத் துடிதுடித்து சிம்ரன் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஐதராபாத்தில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பணி புரிந்து வந்த இளம்பெண் ஒருவர் மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

                                            

சிம்ரன் மூன்றாவது மாடியிலிருந்து எப்படி விழுந்தார் என்று பின்னர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். திருமணமாகாத சிம்ரன் ஏதும் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா?  அல்லது ஏர் இந்தியா நிறுவனம் விற்கப்பட போவதாக எழுந்த பேச்சு குறித்தோ, அல்லது பணிபுரியும் நிறுவனத்தில்  மேலதிகாரிகளால் ஏதும் தொல்லைகளை சந்தித்து வந்தாரா என்கிற கோணத்தில் விசாரணையை துவக்கியுள்ளனர். அது குறித்து ஏதும் கடிதம் எழுதி வைத்துள்ளாரா என்று போலீசார் தேடினர். தனியாக வீடு எடுத்து தங்கியிருந்த சிம்ரனின் வீட்டில், அப்படி எதுவும் கிடைத்ததாக தகவல் இல்லை. எனவே, தவறி விழுந்தாரா அல்லது கொலையா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 22 வயதான இளம் பெண் மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close