காதல் தோல்வியில் பிதற்றும் பிரபல இயக்குநர்!

  சாரா   | Last Modified : 18 Jan, 2020 01:50 pm
is-sj-surya-and-priyabhavani-shankar-are-in-love

தமிழ் சினிமாவில் அறிமுக படத்திலேயே அனைவரையும் கவனிக்க வைக்கிற திறமை ஒரு சில இயக்குநர்களுக்கு தான் வாய்த்திருக்கிறது. தல அஜித்தை வைத்து, சிறந்த இயக்குனராக அறிமுகமானார் எஸ்.ஜே.சூர்யா.  ‘வாலி’  திரைப்படம் எந்தளவிற்கு ரசிகர்களை கவர்ந்து ப்ளாக்பஸ்டர் ஹிட்டடித்ததோ அதற்கு சற்றும் குறை வைக்காமல் விஜய் நடிப்பில் குஷி திரைப்படத்தையும் இயக்கி வெற்றியடைந்தார் எஸ்.ஜே.சூர்யா.

அதன் பின்னர் தான் கிடைத்த வெற்றிகள் தலைக்கேறி, சிம்புடன் கூடாநட்பு கேடாய் விடிந்தது எஸ்.ஜே.சூர்யாவின் வாழ்க்கையில். நல்ல திரைக்கதைகளை நம்பாமல், தனது படங்களுக்கு ஆபாசமான தலைப்புகளைத் தேர்ந்தெடுக்கத் துவங்கி, தனது ரசிகர்களை அவரே விரட்டியடித்தார். இடையில், நடிகை நிலாவுடன் ஊர் சுற்றி வந்த எஸ்.ஜே.சூர்யா, பின்னர் பாலிவுட் சென்று அந்த வாய்ப்புகளையும் வீணடித்தார்.

இவரே நடிக்கவும் செய்து இயக்கிய படங்கள் பெரியளவில் பெற்றிகளைத் தேடி தராத போது, லேட்டஸ்ட் ரிலீசான  மான்ஸ்டர் படத்தின் மூலம் மீண்டும் ஹுரோவாக ரீ-எண்ட்ரி கொடுத்தார். மான்ஸ்டர் படம் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பிற்கு நல்ல பெயரைப் பெற்று தந்தது. மான்ஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார்.

                                                

பொம்மை படத்திலும் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் தான் நடித்துள்ளார். இங்கு தான் எஸ்.ஜே. சூர்யா பழைய பாதையை தேர்ந்தெடுத்துள்ளார் என்று ஆதங்கப்படுகிறது திரையுலகம். தன்னுடன் தொடர்ந்து ஜோடிப் போட்டு நடித்து வரும் பிரியாவை எஸ்.ஜே.சூர்யா காதலிப்பதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அது உண்மை இல்லை என உடனடியாக பிரியா மறுத்து கூறியுள்ளார். அவர் எனக்கு அப்பா மாதிரி என்று அதிர்ச்சி கமெண்ட் எல்லாம் கொடுத்தார் ப்ரியா.

 

இந்நிலையில் தற்போது எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் கோபமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்
இது வதந்தி தான், இவை முட்டாள் யாரோ செய்த வேலை, அவர் என்னுடைய தோழி மட்டுமே என்று கூறியுள்ளார்.

எஸ்.ஜே.சூர்யாவின் காதலை ப்ரியா பவானி சங்கர், அவர் வயதைக் காரணம் காட்டி ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், காதல் தோல்வியில் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே அடுத்தடுத்து தவறுகளை எஸ்.ஜே.சூர்யா செய்து வருகிறார் என்றும்,  பண்ணுறதயும் பண்ணிட்டு கோவம் வேற வருதோ ? காதல் தோல்வியினால் ட்விட்டரில் ஏன் புலம்புகிறீர்கள் என்றும் அவரது ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்து பலரும் வாட்டி வதைக்கிறார்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close