கோர விபத்து.. லாரிக்கு அடியில் சிக்கி நொறுங்கிய கார் - துணை சபாநாயகரின் உறவினர் உட்பட 4 பேர் பலி

  முத்து   | Last Modified : 18 Jan, 2020 01:01 pm
assembly-deputy-speaker-pollachi-jayaraman-relative-car-accident-death

சட்டப் பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ். இவர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனது குடும்பத்துடன்  பல்வேறு கோவில்களில் தரிசனத்திற்காக கடந்த 16ஆம் தேதி காரில் புறப்பட்டு சென்றனர். மதுரையில் உள்ள கோவிலில் தரிசனம் செய்து விட்டு திருச்செந்தூர் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டனர். அவர்களுடன் மதுரையை சேர்ந்த உறவினர்கள் ஆனந்த் மகன் வீரேந்திரன் (15), அவரது சகோதரி ரம்யா (20), ரம்யாவின் தோழி பார்கவி ஆகியோர் மற்றொரு காரில் சென்றனர்.

இவர்களது காரை ஓட்டுநர் ஜோசுவா (30) என்பவர் ஓட்டி சென்றார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைப்பகுதி அருகே கார் சென்றுகொண்டிருந்தப் போது எதிர் திசையில் வந்த கனரக லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதியது. இதில், கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் இருந்த தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் சகோதரர் சுபாஷ் சந்திரபோஸின் பேரன் நீரேந்திரன், ரம்யா, ரம்யாவின் தோழி பார்கவி மற்றும் கார் ஓட்டுனர் ஜோகன் ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காரின் இடிபாடுகளில் சிக்கிய 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கண்டெய்னர் லாரி ஓட்டுநரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கோர விபத்தின் காரணமாக தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close