நடந்து முடிந்த குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்படுமா? டிஎன்பிஎஸ்சி ஆலோசனை!

  சாரா   | Last Modified : 18 Jan, 2020 12:55 pm
tnpsc-group-4-exams-cancelled

கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழகத்தில் குரூப் 4 தேர்வு நடைபெற்றது.  இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் நவம்பர் மாதம் வெளியான நிலையில், குரூப் 4 தேர்வில் நிறைய முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டுக்களை உறுதிபடுத்தும் வகையில், ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களில் சுமார் 40 பேர் முதல் இடங்களைப் பிடித்து தேர்வில் வெற்றிப் பெற்றனர். இதையடுத்து, அந்த மையங்களில் தேர்வெழுதிய 35 பேரிடம் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.அவர்களில் சுமார் 19 மணி நேரத்திற்கும் மேல் நடத்தப்பட்ட விசாரணையில் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டது யார் யார் என கண்டறியப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், யாராவது நீதிமன்றம் சென்றால் தேர்வை ரத்து செய்ய நீதிமன்றம் கட்டாயமாக உத்தரவிடும் என்கிற நிலை தான் தற்போது உள்ளது. இதனால், குரூப் 4 தேர்வை ரத்து செய்வது தொடர்பாகவும், டிஎன்பிஎஸ்சி உயரதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

இன்னும், சில நாட்களில் இந்த தேர்வுகள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி வட்டாரம் உறுதியாக கூறுகிறது.முறைகேடு புகாரால் தேர்வு ரத்து செய்யப்பட்டால், வரும் காலங்களிலும் தேர்வாணையத்தின் மீது சந்தேகப் பார்வை எழும் என்பதால், எதிர்காலங்களில் தேர்வு விதிமுறைகளை தேர்வாணையம் கடுமையாக்க வேண்டும் என்று அரசுத்தேர்வுகளுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் கூறுகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close