தாயை கொலை செய்ய உதவி.. நண்பனின் உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூரம்..

  முத்து   | Last Modified : 18 Jan, 2020 01:38 pm
after-two-and-half-years-brutal-killer-was-torn-pieces

கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு ஆண் ஒருவரின் உடல் பல துண்டுகளாக வெட்டப்பட்டு பாகங்கள் அங்காங்கே கிடந்தன. இதனை அறிந்து உடல் பாகங்களை மீட்ட போலீசார் கொலை செய்யப்பட்டது யார்? எதற்காக கொலை செய்தனர் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் திணறினர். ஆனால் கொலை செய்யப்பட்ட நபரின் கைவிரல் ரேகைகள் பழைய குற்றவாளிகள் ரேகையோடு ஒத்துப்போனது போலீசாருக்கு நம்பிக்கை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து டி.என்.ஏ பரிசோதனை நடத்தப்பட்டது. பழைய குற்றவாளிகள் பட்டியலிலிருந்த நபரின் பெயர் இஸ்மாயில் என்று தெரிந்து போலீசார் விசாரணையில் இறங்கினர். அப்போது பல மாதங்களாக இஸ்மாயில் காணாமல் போயிருந்ததும் தெரிந்தது. விசாரணையின் முடிவில் பல துண்டுகளாக வெட்டப்பட்டு உயிரிழந்தது இஸ்மாயில் தான் என்பதும் உறுதியானது. இதனையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், சொத்துக்கள் அனைத்தையும் விற்றுவிட்டு ஊரைவிட்டு சென்ற இஸ்மாயில் நண்பர் ப்ரிஜூவை ஊட்டியில் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் கிடைத்தது.

"என்னுடைய அம்மா வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்துவந்தார். ஆனால், எனக்கு பணம் தரமறுத்தார். இதனால், இஸ்மாயிலை ஏற்பாடு செய்து அம்மாவிடமிருந்து பணம் கடனாக வாங்கச் செய்தேன். அதை அவர் என்னிடம் கொடுத்தார். பிறகு அம்மாவை கொலை செய்யத் திட்டமிட்டோம். அதன்படி என்னுடைய அம்மாவின் கழுத்தை நெறித்து கொலை செய்து உடலை கட்டி மின்விசிறியில் தொங்கவிட்டு தற்கொலை போன்று நாடகம் ஆடியது ப்ரிஜூவிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

அதன் பிறகு பணம் கேட்டு இஸ்மாயில் நெருக்கடி கொடுத்தார். அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து வீட்டிற்கு வரவழைத்து அதிகளவில் மது கொடுத்து இஸ்மாயிலை கொலை செய்ததை ப்ரிஜூவை  ஒப்புக்கொண்டார். பின்னர் உடல் பாகங்களை வெட்டி பிளாஸ்டிக் பையில் போட்டு பல இடங்களில் வீசினேன். அதன்பிறகு ஊரை காலி செய்துவிட்டு தமிழ்நாட்டுக்கு வந்தேன் என போலீசார் விசாரணையின் போது ப்ரிஜூ வாக்குமூலம் அளித்தார். இந்த தகவலை விசாரணை நடத்திய போலீசார் தெரிவித்தனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close