தமிழகத்தில் நாளை முதல் பால் விலை அதிரடி உயர்வு!

  சாரா   | Last Modified : 19 Jan, 2020 03:59 pm
milk-price-to-increase-from-monday-jan-20

தமிழகத்தில் நாளை முதல் (20-01-20) தனியார் பால் நிறுவனங்கள், லிட்டருக்கு 4 ரூபாய் வரை உயர்த்த உள்ளது.  தமிழகத்தில் பொதுமக்கள் பரவலாகப் பயன்படுத்தி வரும் தனியார் பால் நிறுவனங்களான ஆரோக்யா, ஹெரிட்டேஜ், டோட்லா போன்ற பால் நிறுவனங்கள், நாளை முதல் தங்களது நிறுவனங்களின் மூலம் விற்பனை செய்து வரும்  பால், தயிர் விலையை உயர்த்துகின்றன. பால் விலை லிட்டருக்கு ரூ.4 முதல் 6 வரையிலும் உயரும் என்றும், தயிர் விலை லிட்டருக்கு ரூ.2ரூபாயும் உயர்த்தப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.

இந்த திடீர் பால் விலை உயர்வால் பாலை அதிகமாக பயன்படுத்தும் ஓட்டல்கள், டீ கடைகளில் விலை உயருமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. பொதுவாக பால் விலை உயரும் போதெல்லாம், பால் சார்ந்தப் பொருட்களின் விலையும் அடுத்தடுத்த நாட்களில் உடனடியாக உயர்த்தப்படுவதால், இந்த திடீர் பால் விலை உயர்வு குறித்து பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். 

இந்நிலையில், இந்த திடீர் பால் விலை உயர்வு க் உறித்து தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்கம் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் பால் நிறுவனங்கள்  பால் கொள்முதல் மற்றும் மூலப் பொருள்களின் விலை உயா்வு என்று பொய்க் காரணம் கூறி, கடந்த ஆண்டில் மட்டும் மூன்று முறை இப்படி வெவ்வேறு சமயங்களில் பால் விலையை லிட்டருக்கு ரூ.8 வரை உயர்த்தி இருக்கிறார்கள் என்று தங்களது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close