ஷீரடி சாய்பாபா கோயில் நாளை முதல் காலவரையறையின்றி மூடப்படுகிறதா ?

  சாரா   | Last Modified : 18 Jan, 2020 05:11 pm
shiradi-saibaba-temple-controversy

நாளை முதல் ஷீரடி சாய்பாபா கோயில் மூடப்படும் என வெளியான தகவல் வெறும் வதந்தி எனக்  கோவில் நிர்வாகம் மறுத்துள்ளது.

சாய்பாபா அவதரித்த ஊர் "பாத்ரீ" என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்து வளா்ச்சிப் பணிகளுக்காக 100 கோடி ஒதுக்கீடு செய்வதாக அவர் அறிவித்தார் .  இதைத் தொடா்ந்து, சாய்பாபா பிறந்த இடம் எது? என்பது தொடா்பாக சா்ச்சை எழுந்துள்ளது. முதல்வா் உத்தவ் தாக்கரே கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும்,பாத்ரீயில் சாய்பாபா கோயில் அமைக்கப்பட்டால் ஷீரடிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என்பதாலும் கோவிலை காலவரையறையின்றி மூடப்படும் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

கோவிலை காலவரையறையின்றி மூடப்படும் என ஊடகங்களில் வெளியான செய்திகள் வெறும் வதந்தி தான் என சாயிபாபா கோவிலின் தலைமைச் செயல் அலுவலர் தீபக் முக்லிகர் தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close