சென்னையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!

  சாரா   | Last Modified : 20 Jan, 2020 11:32 am
traffic-diversion-for-republic-day

மெரினாவில் குடியரசு தின விழாவிற்கான  ஒத்திகை நடை பெறுவதையொட்டி, இன்று முதல் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இந்த போக்குவரத்து மாற்றத்தைத் தெரிந்துக் கொள்ளாமல், மாற்றப்பட்ட சாலைகளில் சென்று சிக்கிக் கொள்ளாதீர்கள்.

குடியரசு தினவிழா கொண்டாட்டம் 26-ந்தேதி காமராஜர் சாலையில் நடைபெறவிருப்பதால் அதற்கான ஒத்திகை இன்று முதல் 25ம் தேதி வரையில் நடைப்பெற இருக்கிறது. குடியரசு நாளான 26-ம் தேதி குடியரசு தின நிகழ்ச்சிகள் நடைப்பெற இருக்கிறது. அதனால் இன்று  துவங்கி,  23ம் தேதி வரை மூன்று நாட்களுக்கும், குடியரசு தினவிழா நடைபெறும் 26ம் தேதியும்,காமராஜர் சாலையில், சாந்தோம் சர்ச்  முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 6 மணி முதல் 10 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.

அடையாறில் இருந்து பிராட்வே செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை வழியாக செல்லலாம். ஆர்.கே சாலையில் காந்திசிலை நோக்கி செல்லும் பேருந்துகள் ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக திருப்பி விடப்படும். ஆர்.கே சாலையில் காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் நடேசன் சாலை வழியாக திருப்பி விடப்படும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close