உஷார்!! செல்ஃபி போட்டோவுக்கு ஆசைப்பட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!

  சாரா   | Last Modified : 25 Jan, 2020 05:30 pm
teen-s-photoshoot-goes-wrong-when-dog-bites-face

செல்ஃபி புகைப்படம் எடுக்கும் மோகம் உலகம் முழுக்கவே மக்களிடையே இருந்து வருகிறது. மலை உச்சியில் பாதுகாப்பில்லாமல் நின்று கொண்டு சாகசங்களை செய்தபடியே செல்ஃபி எடுக்க முயன்று உயிரிழந்தவர்கள் நிறைய பேர். இப்படி மொட்டை மாடியின் உச்சியில் நின்று, நீச்சல் குளத்தின் அருகே நின்றபடியே, பால்கனியில் சாய்ந்தபடியே என்று செல்ஃபி மோகத்தில் உலகம் முழுக்கவே தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் இறந்து போவதாக ஆய்வுகள் வெளியாகியுள்ளன.

இன்னும் சிலர் தங்களது செல்ல வளர்ப்பு பிராணிகளுடன் இப்படி செல்ஃபி புகைப்படங்களை எடுப்பதில் துவங்கி, காலை சாப்பாடு, மாலை ஷாப்பிங், இரவு டின்னர் என்று முகநூலிலும், இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும் பதிவேற்றுவதற்காகவே செல்ஃபிகளை வெறி கொண்டு எடுத்துத் தள்ளும் பழக்கத்தை வைத்துள்ளனர். அப்படி முழுக்க முழுக்க காலணாவுக்கும் தேறாத லைக்ஸ்களுக்காகவும், கமெண்ட்டுகளுக்காகவும் இவர்கள் செய்கிற செல்ஃபி கூத்துக்கள் சிவக்குமார் போன்ற நடிகர்கள் செல்போன்களைத் தட்டி விடுவதில் துவங்கி, சமயங்களில் உயிருக்கே உலை வைக்கும் அளவிற்கு செல்வது தான் கொடூரம்.

இப்படி அர்ஜென்டினாவில் தனது வளர்ப்பு நாயுடன் செல்ஃபி எடுக்க முயன்ற பெண்ணுக்கு நேர்ந்துள்ளது. லாரா சன்சோன் என்ற 17 வயது நிரம்பிய அந்தப் பெண், தனது தோழியின் செல்லப் பிராணியான ஜெர்மன் ஷெப்பர்ட் நாயுடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக நாய் அவரது முகத்தில் ஆழமாக கடித்து விட்டது. இதில் படுகாயமடைந்த அவருக்கு மருத்துவமனையில் உள் தையல், வெளி தையல் என முகத்தில் மட்டுமே மொத்தம் 40 தையல் போடப்பட்டுள்ளது.

                                                    


இது தொடர்பாக லாரா சன்சோன் அளித்துள்ள பேட்டியில், எதற்காக நாய் இவ்விதம் செய்தது என எனக்கு தெரியவில்லை. நான் நாயின் இடுப்பை தொட்டு செல்ஃபி எடுக்க முயன்றதால் பயத்தில் நாய் இப்படி செய்ததா? இல்லை வயது முதிர்வு காரணமாக இப்படி  நடந்து கொண்டதா? என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், இதற்கு முன்னரும் அதனுடன் நான் நிறைய செல்ஃபி புகைப்படங்களை எடுத்துள்ளேன். இந்த சம்பவத்திற்கு பின்னர் நான் உடனடியாக சமூக வலைத்தளங்களில் உள்ள எனது கணக்குகளை நீக்கி விட்டேன் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

பொதுமக்களே... உஷாரா இருந்துக்கோங்க... செல்ஃபி புகைப்படங்களில் நீங்க எல்லோருமே நிஜமாவே ரொம்ப அழகா தான் இருக்கீங்க. ஆனா புகைப்படங்களை விட நேர்ல எப்பவுமே நீங்க அழகா இருக்கணுமில்லையா... அதனால செல்ஃபி மோகத்துல  உங்களோட பாதுகாப்பை மறந்துடாதீங்க!!
தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close