இந்தியா முழுக்க ஒரே நேரத்தில் 6 மாநிலங்களில் குண்டு வெடிக்க திட்டம்! தீவிரவாதிகள் பகீர் வாக்குமூலம்!

  முத்து   | Last Modified : 19 Jan, 2020 07:09 am
plan-to-bomb-6-places-in-india

குடியரசு தினத்தன்று 6 மாநிலங்களில் ஒரே நேரத்தில் வெடிகுண்டு வெடிக்க திட்டம் தீட்டியதாக கியூ பிரிவு போலீசாரிடம் தீவிரவாதிகள் வாக்குமூலம் அளித்தாக கூறப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை போலீஸ் சோதனை சாவடியில் பணியில் இருந்த எஸ்.ஐ. வில்சன் கடந்த 8ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் சமீம், இளங்கடையை சேர்ந்த தவுபிக் ஆகியோரை கர்நாடக மாநிலம் உடுப்பியில் கடந்த 14ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். அவர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க கியூ பிரிவு போலீசார் நாளை குழித்துறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

இந்தநிலையில் களியக்காவிளை எஸ்ஐ சுட்டுக்கொலை வழக்கில் மூளையாக செயல்பட்டவரும், தீவிரவாத அமைப்பான அல் உம்மாவின் தலைவருமாக இருந்த  மெகபூப் பாஷா (45) என்பவரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர். இவரது கூட்டாளிகள் முகம்மது மன்சூர், ஜபீபுல்லா, அஜ்மத்துல்லா ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்துல் சமீம், தவுபிக் ஆகியோருக்கு துப்பாக்கி சப்ளை செய்த இஜாஸ் பாஷா என்பவர் மெகபூப் பாஷாவின் சகோதரர். கேரளா, தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களில் மோதல்களை ஏற்படுத்த மெகபூப் பாஷாவின் எஸ்ஜி பாளையில் உள்ள வீட்டில் சதி திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது என்று கர்நாடக போலீசின் சென்ட்ரல் கிரைம் பிராஞ்ச் (சிசிபி) மற்றும் உள்துறை பாதுகாப்பு பிரிவினர் (ஐஎஸ்டி) தெரிவித்துள்ளனர்.  

பெங்களூருவில் கலாசி பாளையம் என்ற இடத்தில் தனியார் டிராவல் ஏஜென்சியில் டிரைவராக வேலை பார்த்து வந்தவர் மெகபூப் பாஷா. மும்பை வழித்தடத்தில் பல நாட்கள் இவர் வாகனம் ஓட்டி வந்துள்ளார். இதன் மூலம் மும்பையில் உள்ள ஆயுத வியாபாரிகளுடன் அவருக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளது. மனித வெடிகுண்டு பயிற்சிக்காக இளைஞர்களை சிரியாவில் ஐஎஸ் மையங்களுக்கு அனுப்புதலில் ஈடுபட்டுள்ளார். மெகபூப் பாஷாவுக்கு எஸ்ஐ வில்சன் கொலையில் உள்ள தொடர்புகள் குறித்து விசாரிக்க தமிழக போலீசாரும் திட்டமிட்டுள்ளனர்.

இதனிடையே,  பெங்களூருவில் கைதான முகம்மது  ஹனீப்கான், இம்ரான்கான், முகமது செய்யது ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், எங்களுடைய தலைவர் மெகபூப் பாஷா (30), தமிழகத்தில் காஜாமொகீதின் என்பவர் தலைமையில் அல்-ஹண்ட் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளார். குடியரசு தினத்தன்று தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகராஷ்டிரா, குஜராத், டெல்லி ஆகிய 6 மாநிலங்களில் ஒரே நேரத்தில் பெரிய அளவில் வெடிகுண்டு வெடிக்க வைக்க திட்டம் தீட்டி 17 பேர் கொண்ட ஒரு குழுவை உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளனர். மேலும் மெகபூப் பாஷா, காஜாமொய்தீன் ஆகிய இருவரும் நேபாள தலைநகரம் காட்மண்ட்டில் வெடிகுண்டு எப்படி வெடிக்க வைக்க வேண்டும், அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பயிற்சி பெற்றுள்ளதாகவும் அங்கிருந்து வரும் போது வெடிகுண்டு, துப்பாக்கி போன்றவற்றை கொண்டு வந்ததாகவும் கியூ பிரிவு போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தாக கூறப்படுகிறது. இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு மக்கள் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு, சோதனை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close