சிறுமி பாலியல் பலாத்காரம்.. ஜாமீனில் வந்த குற்றவாளிகள் தாயை அடித்தே கொன்ற கொடூரம்..!

  முத்து   | Last Modified : 19 Jan, 2020 09:13 am
accused-molesting-girl-who-are-currently-out-bail-attacked-victims-mother

உத்தரப்பிரதேசத்தில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் ஜாமீனில் வெளியேவந்து சிறுமியின் தாயாரை அடித்தே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு கான்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்த சிறுமியை ஒரு கும்பல் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது. இது தொடர்பான புகாரில் சிறையில் அடைக்கப்பட்ட அந்த கும்பல் இப்போது ஜாமினில் வெளியே வந்தனர்.

பின்னர் நேராக புகார் அளித்த சிறுமியின் வீட்டிற்கு சென்ற கும்பலைச் சேர்ந்த 5 பேர் குடும்பத்தினர் மீது கொடூர தாக்குதல் நடத்தினர். ஆண், பெண், பெரியவர்கள், சிறியவர்கள் என பேதமின்றி அக்கும்பல் வீட்டில் இருந்த அனைவரையும் கடுமையாக தாக்கியது. இதனால் கான்பூர் சம்பவம் இன்னொரு உன்னாவ் என்று வர்ணிக்கப்படுகிறது. சிறுமியின் தாயார் கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில்  வைரலாகி வருகிறது.

இந்த தாக்குதலில் காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் தாயார் மருத்துவமனையில் உயிரிழந்தார். மேலும் பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து தாக்குதல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் இதுபோன்ற பாலியல் பலாத்கார சம்பவங்களும், புகார் அளிப்பவர்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close