அடுத்த வாரம் கல்யாணம்! மாப்பிள்ளையின் குடும்பமே தற்கொலை செய்துக் கொண்ட அதிர்ச்சி காரணம்!

  முத்து   | Last Modified : 19 Jan, 2020 05:27 pm
marriage-was-arranged-but-youth-committed-suicide-along-his-family

பணம் சம்பாதிக்க வேண்டும் என அதிகளவில் கடன் வாங்கி பெரு நஷ்டம் ஏற்பட்டதால் இளைஞர் எதிர்கொண்ட அவமானத்தால் ஒரு குடும்பமே மாண்டுள்ள சோகம் நிகழ்ந்துள்ளது. 
தென்காசி மாவட்டம் ஆம்பூர் பகுதியில் உள்ள ரோஸ் கார்டனில் வசித்து வருபவர் சந்தானம். இவர் பலசரக்கு விற்கும் ஏஜென்சி ஒன்றை நடத்தி வந்தார். இவரது மனைவி ஆசிரியையாகவும் இவரது மகன் ஸ்ரீதர் ஆன்லைன் வர்த்தகத்திலும் ஈடுபட்டு இருந்துள்ளார். வரும் 27 ஆம் தேதி ஸ்ரீதருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த ஸ்ரீதர், பலரிடம் கடன் வாங்கி முதலீடு செய்துள்ளார்.

அதில் பெரிய அளவு நஷ்டமும் ஏற்பட்டதால் அவரால் வாங்கிய கடனை முறையாக திருப்பி செலுத்த முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடன் கொடுத்தவர்கள் ஸ்ரீதர் கடந்த 15 ஆம் தேதி, அதாவது பொங்கல் அன்று ஸ்ரீதர் வீட்டிற்குச் சென்று தகராறு செய்துள்ளனர். அதுமட்டுமில்லாமல், அவர்களின் வீட்டிலிருந்த பொருட்களையெல்லாம் எடுத்துச் சென்று விட்டதாக, அவர்களது வீட்டின் அருகே இருந்த மக்கள் தெரிவித்துள்ளனர். 

வீட்டிற்கு வந்து கடன் கேட்டு அவமானப் படுத்தியதால் மன உளைச்சல் தாங்க முடியாமல் ஸ்ரீதரும் அவரது தாய், தந்தையும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும், ஸ்ரீதர் எவ்வளவு கடன் வாங்கியிருந்தார், கடன் பிரச்சனை காரணமாகத் தான் தற்கொலை செய்து கொண்டார்களா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். அதேவேளையில் வீட்டிற்கு வந்து அவமானப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close