மனைவியை உயிருடன் தீவைத்து எரித்த கணவர்.. நிர்க்கதியாக நிற்கும் மூன்று குழந்தைகள்!

  முத்து   | Last Modified : 20 Jan, 2020 07:16 am
husband-who-burned-his-wife-alive

நெல்லை அருகே சீதபற்பநல்லூர் அடுத்துள்ள கீழகருவநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் ஜெயா என்ற மனைவி, 2 பெண் குழந்தைகள், 9 மாத ஆண் குழந்தை என குடும்பத்துடன் வசித்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான சுரேஷ் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையன்று குடித்துவிட்டு போதையில் வீட்டிற்கு வந்த சுரேஷ் வழக்கம்போல் தனது மனைவி ஜெயாவிடம் சண்டைபோட்டுள்ளார்.

'ஊரே பொங்கல் கொண்டாடுது, நல்லநாள் அதுவுமா மது அருந்திவிட்டு சண்டை போடுவதா' என சுரேஷிடம் அவரது மனைவி சண்டையிட்டார். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த சுரேஷ் ஜெயா மீது மண்ணெண்யை ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் உடல் முழுக்க தீப்பற்றவே அலறித்துடித்த ஜெயாவின் குரலை கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

இதுகுறித்து ஜெயா அளித்துள்ள வாக்குமூலத்தில் கணவர் சுரேஷ் மண்ணெண்யை ஊற்றி தீ வைத்ததாகக் கூறியதையடுத்து சீதபற்பநல்லூர் போலீசார், சுரேஷ் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இதை தொடர்ந்து ஜெயா நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதனால் கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தாய் பரிதாபமாக இறந்துவிடக் குழந்தைகள் மூவரும் நிர்க்கதியாகி உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close