ஷேர் ஆட்டோவில் இளைஞர்கள் செய்த கொடுமை.. திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.!

  முத்து   | Last Modified : 20 Jan, 2020 05:01 am
chennai-youth-cut-off-woman-hair-while-traveling-in-share-auto

சென்னை அமைந்தகரையில் 23 வயது தக்க இளம்பெண் ஒருவர் ஷேர் ஆட்டோவில் ஏறி பயணித்துள்ளார். அவருடைய இருக்கைக்கு பின்னால் இரண்டு இளைஞர்கள் இருந்துள்ளனர். ஆட்டோ சிறுதூரம் சென்ற பின்னர் அவருடைய கூந்தலை யாரோ கடினமாக தொடுவதை போல் உணர்ந்துள்ளார். இதனால் அச்சத்துடன் அப்பெண் திரும்பி பார்க்கும் போது அவருடைய தலைமுடி பாதியாய் வெட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் அவர் கூச்சலிட்டு ஆட்டோவை நிறுத்தினார். இதனை  அறிந்துகொண்ட ஆட்டோ டிரைவரும், மற்ற பயணிகளும் இளம்பெண்ணின் பின்னால் அமர்ந்திருந்த இளைஞர்களை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அதில் ஒரு இளைஞரின்  பாக்கெட்டில் வெட்டப்பட்ட முடி இருந்ததை கண்டனர்.  பின்னர் இருவரையும் அழைத்து சென்று அமைந்தகரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் விசாரணையில் இளம்பெண்ணின் முடியை வெட்டியதற்கு முன் விரோதம் ஏதும் இல்லை என கூறப்படுகிறது. எனினும் பில்லி சூனியம் வைப்பதான காரணங்கள் உள்ளதா என்ற அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் இளைஞர்கள் தரப்பில் எந்த நோக்கமும் இல்லை, சும்மா விளையாட்டிற்காக வெட்டினோம் என்று கூறியுள்ளனர்.  இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணும் புகார் அளிக்க மறுத்ததால் போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் எச்சரித்து அனுப்பினர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close