தர்பார் வசூலை மிஞ்சிய தமிழக அரசு! புலம்பும் பொதுமக்கள்!

  முத்து   | Last Modified : 19 Jan, 2020 03:59 pm
tasmac-pongal-collection-report

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி விடப்பட்ட தொடர் விடுமுறை தினங்களில், சுமார் 606 கோடியே 72 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட மது விற்பனை அதிகமாக இருக்கும்.

இதன்படி பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை 606 கோடியே 72 லட்சம் ரூபாய்-க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை சனி, ஞாயிற்று கிழமையுடன் முடிவடைகிறது. இந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 380 ரூபாய் கோடி வரை மது விற்பனையாகும் என்று டாஸ்மாக் வட்டாரங்கள் கூறுகின்றன.

பொங்கல் பண்டிகை கடந்த 15ந்தேதி கொண்டாடப்பட்டது. மறுநாள் திருவள்ளுவர் தினத்தன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. கடந்த 14ந்தேதி போகியன்று 178 கோடி ரூபாய்க்கும், 15ந் தேதி பொங்கலன்று 253 கோடி ரூபாய்க்கும், 17ந் தேதி காணும் பொங்கலன்று 174 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  தமிழகத்தில், அதிகபட்சமாக திருச்சி மண்டலத்தில் 143 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், பொங்கல் விடுமுறையில் மட்டும், டாஸ்மாக் கடைகளில் 986 கோடி ரூபாய் அளவிற்கு மது விற்பனையாகக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தொகை, ரஜினியின் ‘தர்பார்’ படம் வசூலித்த தொகையை விட அதிகமானது. நாட்டில் அரசு கவனிக்க வேண்டிய எத்தனையோ பிரச்சனைகள் கிடப்பில் போடப்பட்டு காத்திருக்கின்றன. குறிப்பாக தமிழகத்தில் மக்களுக்கான வளர்ச்சி திட்டங்கள் வேகமெடுக்காமல்,  மந்த நிலையிலேயே நடந்து வருகின்றன. இந்நிலையில், டாஸ்மாக் வியாபாரத்திற்கு இலக்கு நிர்ணயித்து, பணியாளர்களை நியமித்து, அதில் அதிக தொகை விற்பனையாகியுள்ளது என்று சந்தோஷப்படும் நிலையில் தான் தமிழகம் உள்ளது என்று பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close