எச்.ராஜா தமிழக பாஜக தலைவர் கிடையாது! வெளியானது அறிக்கை!

  சாரா   | Last Modified : 19 Jan, 2020 05:13 pm
bjp-leader-talks-about-tamilnadu-bjp-leader

தமிழகத்தில் பாஜக தலைவராக இருந்து வந்த தமிழிசை, கவர்னராக நியமிக்கப்பட்டு நீண்ட நாட்களாகியும், இதுவரையில் தமிழக பாஜகவிற்கு புது தலைவர் நியமிக்கப்படாமலேயே இருந்து வருகிறது. பாஜக தலைவர் பதவிவிக்கு டெல்லி மேலிடம் 16 பேர்களைக் கொண்ட பட்டியல் ஒன்றை தயாரித்து, அந்த லிஸ்ட்டில் இருந்து ஒவ்வொருவராக குறைத்து வருவதாக தகவல்கள் வெளியாகின்றன. இந்நிலையில், கடந்த வாரம், நடிகர் எஸ்.வி.சேகர், பாஜகவின் தமிழக தலைவராக தான் நியமிக்கப்பட்டால் சிறப்பாக செயல்படுவேன் என்றும், தமிழக தலைவரின் பெயர் பட்டியலில் தனது பெயரும் இருப்பதாக கூறியிருந்தார்.

இந்நிலையில், பொன்.ராதாகிருஷ்ணன், வானதி என்று ஒவ்வொருவர் பெயராக தமிழக தலைவருக்கான பெயர்களில் டிக் செய்யப்பட்டு வலம் வந்த நிலையில், நேற்று திடீரென தமிழக பாஜ தலைவராக எச்.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. யாரோ சில விஷமிகளோ, எச்.ராஜாவின் ஆதரவாளர்களோ அவர், தமிழக தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதாக போட்டோஷாப் செய்து ஒரு கடிதத்தை வெளியிட்டிருந்தனர். இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதை அடுத்து, தமிழக பாஜக தலைவரை தேர்வு செய்ய இன்னும் ஒரு சில வாரங்கள் ஆகும் என்றும், அது வரையில், சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்பப்படுவது கண்டனத்திற்குரியது என்றும் பாஜகவின் அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழக பாஜ கட்சியின் புதிய மாநில தலைவர் பற்றி பல்வேறு விதமான வதந்திகளும், சித்தரிப்புகளும் கடந்த பல நாட்களாக சமூக ஊடகங்களில்  வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழக பாஜ மாநில தலைவர் யார் என்று இன்னும் முடிவாகவில்லை என்றும், முடிவு செய்வதற்கு  இன்னும் ஒரு சில வாரங்கள் ஆகும் என்றும் தெரிவித்துள்ளார். 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close