மலையேற்ற பயிற்சிக்கு சென்ற பெண் கணவன் கண்முன் மனைவிக்கு நடந்த சோகம்..!

  சாரா   | Last Modified : 21 Jan, 2020 03:21 pm
wild-elephant-attacks-woman-trampled-to-death-near-coimbatore

மலையேற்ற பயிற்சிக்கு சென்ற இடத்தில் கணவன் கண் முன் மனைவி, யானை மிதித்து பரிதாபமாக பலியானார். தனது கணவருடன் மலை ஏற்ற பயிற்சிக்கு சென்ற பெண்ணை யானை மிதித்து சம்பவ இடத்தில் தலை சிதறி பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய சரகம் பாலமலை குஞ்சூர் பதியிலிருந்து பசு மணி செல்லும் சாலையில் இன்று காலை கணபதி பகுதியில், வசித்து வரும் பிரசாந்த் மனைவி உட்பட 7 நபர்களுடன் பாலமலை அடிவாரத்திலிருந்து Trucking ஆக மலையேறிச் சென்று சம்பவ இடத்தில் நடந்து செல்லும் போது யானை துரத்தியதில் யானை மிதித்து புவனேஸ்வரி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

மற்ற நபர்கள் ஓடிவிட்டனர். இதில் யாருக்கும் காயம் இல்லை தகவலறிந்து பெரியநாயக்கன்பாளையம் பாரஸ்டர் வெங்கட்ராமன் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வநாயகம் ஆகியோர் சம்பவ இடத்தில் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close