ஸ்கேனில் தெரிஞ்சது 3 குழந்தை! டெலிவரி ஆனது 4 குழந்தைகள்! மருத்துவர்கள் ஆச்சரியம்!!

  சாரா   | Last Modified : 21 Jan, 2020 03:17 pm
4-baby-born

நேபாளத்தைச் சேர்ந்த சுனிதா என்ற 26 வயது இளம்பெண் சமீபத்தில் கர்ப்பம் ஆனார். இந்நிலையில், வழக்கமான மருத்து பரிசோதனைக்கு சென்றிருந்தார். அவரை மருத்துவர்கள், வயிற்றுள் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தை சரி பார்ப்பதற்காக வழக்கமான முறையில் ஸ்கேன் எடுத்து வரச் சொன்னார்கள். அதே மருத்துவமனை வளாகத்தில் அந்தப் பெண் ஸ்கேன் எடுத்துக் கொண்டு மருத்துவர்களிடம் காட்டிய போது, ஸ்கேன் ரிப்போர்ட்டில், அந்த பெண் வயிற்றில் மூன்று குழந்தைகள் இருந்தது தெரிய வந்தது.

பின்னர், வழக்கமான சத்து மாத்திரைகளை எழுதிக் கொடுத்து மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். பின்னர் இடைவெளிக்குப் பின்னர், இரண்டாவது முறை குழந்தைகளின் உறுப்புகளின் வளர்ச்சியை பரிசோதிப்பதற்காக ஸ்கேன் செய்துப் பார்த்த போதும், அந்தப் பெண்ணின் வயிற்றில் மூன்று குழந்தைகளே இருந்துள்ளன. ஆனால் அவருக்கு சமீபத்தில் டெலிவரியான போது நான்கு குழந்தைகள் பிறந்துள்ளது மருத்துவர்களையே ஆச்சரியப்படுத்தியுள்ளது.

நான்காவது மாதத்தில் ஸ்கேன் எடுத்துப் பார்த்த போதும் கருப்பையில் மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் மூன்று குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், நான்கு குழந்தைகள் பிறந்துள்ளது அந்தப் பெண்ணையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு டெலிவரி செய்த மருத்துவர்கள் மூன்று பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளதை பார்த்து ஆச்சர்யமடைந்தனர். மூன்று குழந்தைகள் மட்டுமே ஸ்கேனில் தெரிந்த நிலையில் நான்காவதாக ஒரு குழந்தை எப்போது உருவானது என்பது மருத்துவர்களுக்கு புரியாத புதிராக உள்ளது. 

கருத்தரிக்கும் பெண்களில், லட்சத்தில் ஒருவருக்குத் தான் நான்கு குழந்தைகள் கருத்தரிக்கும் வாய்ப்புகள் இருக்கிறது என்று  மருத்துவர்கள் கூறினார்கள். அந்த பட்டியலில் இந்த சுனிதாவும் சேர்ந்துள்ளார். தற்போது நான்கு குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close