கையில் கருப்பு பட்டையுடன் விளையாடி வரும் இந்திய வீரர்கள்! நெகிழும் ஆஸ்திரேலிய அணி!

  சாரா   | Last Modified : 19 Jan, 2020 04:43 pm
indian-players-pay-respect-to-bapu-nadkarni

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்திருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவுடன் 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. இந்தியாவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் இடையே நடைப்பெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்ற நிலையில், 2வது போட்டியில் இந்தியா வென்றது. இந்நிலையில், இன்று இரு அணிகளும் மோதும் இந்த தொடரின் கடைசிப் போட்டி நடைப்பெற்று பெங்களுருவில் வருகிறது. இதில் டாஸ் வென்று, ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது. 

இந்நிலையில் இந்தப் போட்டியில் கலந்துக் கொண்டுள்ள இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும், கைகளில் கருப்பு கைப்பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.

கடந்த 17ஆம் தேதி தனது 86ஆவது வயதில் காலமான  முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், ஆல் ரவுண்டருமான திரு. பாபு நட்கர்னிக்கு அஞ்சலியும், மரியாதையும்  செலுத்தும் விதமாக தான் இன்றைய போட்டியில் இந்திய அணி வீரர்கள் அனைவரும், அவர்களது கையில் கருப்பு கைப்பட்டை அணிந்து களமிறங்கி விளையாடி வருகின்றனர். 

 

பாபு நட்கர்னி, 41 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 1,414 ரன்கள் மற்றும் 88 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும் இவர், கடந்த 1960-61ல் நடைப்பெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், 32 ஓவர்கள் பந்து வீசி அவற்றில்,  24 ஓவர்களில் ஒரு ரன் கூட கொடுக்காமல் பவுலிங் செய்து அசத்தினார். அதே போல் டெல்லியில் நடந்த போட்டியிலும் 34 ஓவர்கள் பந்து வீசி, 24 ஓவர்களில் ஒரு ரன் கூட கொடுக்காமல் 1 விக்கெட்டையும்  சாய்த்தார். கிரிக்கெட்  வரலாற்றிலும் இன்று வரையில் இது சாதனையாகவே இருந்து வருகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close