திருப்பதியில் இன்று முதல் இலவச லட்டு

  சாரா   | Last Modified : 20 Jan, 2020 06:46 am
free-laddu-from-tomorrow-in-tirupati

திருப்பதி ஏழுமலையான் கோயில் பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்கும்  திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சலுகை விலை லட்டுகளை விரைவில் ரத்து செய்யும் வகையில், முதல்கட்டமாக அனைத்து பக்தர்களுக்கும் ஒரு லட்டு இலவசமாக வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.தற்போது இலவச தரிசனத்திலும், மலைப்பாதையில் பாதயாத்திரையாக நடந்து வந்து திவ்ய தரிசனம் டிக்கெட் பெற்று வரும் பக்தர்களுக்கு மட்டும் இலவசமாக ஒரு லட்டும், சலுகை விலையில் 4 லட்டுகள் 70 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 250 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.இதுவரை வழங்கப்பட்டு வந்த 70 ரூபாய்க்கு 4 லட்டு நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி இன்று முதல் அனைத்து பக்தர்களுக்கும் ஒரு லட்டு இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அதிக லட்டு வாங்க கோவிலுக்கு வெளியே உள்ள கவுண்டர்களில் 50 ரூபாய்க்கு லட்டுகள் விற்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.லட்டுகள் விற்பனைக்காக 12 கவுண்டர்கள் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close