காதலன் கண்முன்னே இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கொடூர கும்பல்!!

  முத்து   | Last Modified : 20 Jan, 2020 09:41 am
vellore-castle-park-attacking-the-boy-friend-young-and-girl-rape

காதலனுடன் வெளியே சென்ற பெண்ணை கும்பல் ஒன்று காதலன் கண்முன்னே கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. 

வேலூரை அடுத்த அடுக்கம்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண், அங்குள்ள பிரபல ஜவுளிக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இவரும் அதே கடையில் பணிபுரியும் இளைஞர் ஒருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் வேலை முடிந்தபின்னர், காதல் ஜோடியினர் இரவில் கோட்டை பூங்காவிற்கு சென்றனர். அங்கு அகழி கரையோரம் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். இந்த பூங்காவில் அமர்ந்து இருப்பவர்களை தினமும் இரவு 7.30 மணிக்கே பராமரிப்பு ஊழியர்கள் வெளியேற்றி விடுவர். அதன்பின்னர்தான் இவர்கள் பூங்காவிற்குள் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இரவு பொதுமக்கள் நடமாட்டமின்றி பூங்கா வெறிச்சோடி காணப்பட்டது. அங்கு காதல் ஜோடியினர் தனியாக இருப்பதை அறிந்த 3 பேர் கொண்ட கும்பல் அவர்களின் அருகே சென்றது.

அப்போது அவர்கள் இளம்பெண்ணிடம் அத்துமீறினர். அதனை தடுத்த காதலனை அந்த கும்பல் சரமாரியாக தாக்கி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மரத்தின் அடியில் உட்கார வைத்தனர். தொடர்ந்து இருவரிடமும் இருந்த செல்போன், பணம் மற்றும் இளம்பெண் அணிந்த கம்மலை அந்த கும்பல் பறித்தனர். அதன்பின்னர் இளம்பெண்ணை அந்த கும்பலில் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றான். அப்போது அவர் அலறி கூச்சலிட்டுள்ளார். அதனால் ஆத்திரம் அடைந்த மர்மகும்பல் இளம்பெண்ணை தாக்கி, காதலனை கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர். அதையடுத்து அவர் அமைதியானார். அதன்பின்னர் 3 பேரும் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. 

பின்னர் அவர்கள் காதல் ஜோடியிடம் இங்கு நடந்ததை யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இரவு 10.30 மணியளவில் இளம்பெண் அவருடைய வீட்டிற்கு சென்றார். அவரின் முகத்தில் காணப்பட்ட காயம் மற்றும் காதில் கம்மல் இல்லாததை கண்ட பெற்றோர் அதுகுறித்து கேட்டனர். அப்போது அவர் கோட்டை பூங்காவில் நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதுள்ளார். அதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக மகளை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்பான புகாரில் பூங்காவை ஒட்டியுள்ள பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து குற்றவாளிகள் வேலூர் கஸ்பா வசந்தபுரத்தை சேர்ந்தவர்கள் என்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து அவர்களை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close