வாய்ப்பு கிடைக்காததால், Hotel வேலைக்கு சென்ற பிரபல நடிகை !

  முத்து   | Last Modified : 20 Jan, 2020 08:51 am
famous-actress-went-to-work-in-the-hotel-because-no-serial-offer

90’s கிட்ஸ் தொலைக்காட்சி தொடர்களில் மிகவும் பிரபலமானது ஆனந்தம். அந்த தொடரில் வில்லியாக நடித்த பிரிந்தா தாஸை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். அமைதியான கதாப்பாத்திரத்தில் வில்லியாக அந்த தொடரில் மிரட்டியிருப்பார். அண்மையில் அவர் அளித்த பேட்டியில், 2003ஆம் ஆண்டு தொடங்கின ஆனந்தம்’ சீரியல், 2009-ல் முடிஞ்சது. கிட்டத்தட்ட அஞ்சரை ஆண்டுகள் பயணம் சைலன்ட் வில்லியா நடிச்சிருப்பேன்.

எங்கே போனாலும் ‘அபிராமி’னு பாராட்டும் கிடைக்கும்; திட்டும் கிடைக்கும். என் நிஜ பெயரையே மறந்துட்டாங்க. அந்த சீரியல் என் மனசுக்கு ரொம்பவே நெருக்கமானது அதில் வொர்க் பண்ணினது, மறக்கமுடியாத காலகட்டம் என்றார். மேலும் ஹாய் டா’னு ஒரு படமும் இயக்கினேன் சேஞ்ச் வேணும்னு ஆசைப்பட்டேன். பர்சனல் காரணங்கள் எதுவுமில்லை. தற்போது ITC GRAND CHOLA HOTEL -இல் Receptionist – ஆ பணிபுரிந்து வருகிறேன். வாய்ப்புகள் கிடைக்காததால் இந்த வேலைக்கு வந்துடேன்.

காலை முதல் மாலை வரை ஆபீஸ் வேலை. அப்புறம் குடும்பப் பொறுப்புகள் என வாழ்க்கை போயிட்டிருப்பதாக கவலையுடன் கூறினார். எனினும் நல்ல கதையாக வந்தால் நடிக்கும் ஆசையும் இருக்கு. குறுகிய காலத்துக்குள் முடியுற மாதிரி இருந்தால் நிச்சயம் நடிப்பேன் என தனது நிலைப்பாட்டை தெளிவாக அவர் கூறினார்.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close