பொங்கல் கொண்டாட சொந்த ஊருக்கு ஏன் வந்தாய்.. முன்விரோதம் காரணமாக இளைஞர் கொடூரக் கொலை..!

  முத்து   | Last Modified : 20 Jan, 2020 10:08 am
a-youth-has-been-hacked-to-death

நாகை மாவட்டம் மயிலாடுதுறை வரதாச்சாரியார் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (26). பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த இவரும், இதே பகுதியைச் சேர்ந்த முனுசாமி என்பவரும் சேர்ந்து இறப்பு நிகழ்ச்சிகளில் மேளம் அடித்து வந்தனர். இந்த வேலை நிமித்தமாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதனால், வெளியூருக்குச் சென்று வேலை பார்த்து வந்த மணிகண்டன், பொங்கல் விழாவுக்காக மயிலாடுதுறைக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், மணிகண்டன் ஊருக்கு வந்திருப்பதை அறிந்த முனுசாமி, அவருடைய நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து மணிகண்டனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தகராறு முற்றி, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் முனுசாமியும் அவரது நண்பர்களும் சேர்ந்து மணிகண்டனை ஓடஓட விரட்டி வெட்டியதாக கூறப்படுகிறது. இந்த மோதலில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை செய்யப்பட்டு கிடந்த மணிகண்டனின் உடலை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தந்துள்ளனர்.

இதையடுத்து, மயிலாடுதுறை போலீஸார் விரைந்து வந்து சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதனையடுத்து கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இறந்துபோன மணிகண்டன், தேடப்படும் குற்றவாளியான முனுசாமி ஆகிய இருவரும் கடந்த 2014-ஆம் ஆண்டு வேறு ஒருவரை கொலை செய்த வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close