ரஜினி பொண்ணுக்கு யாரால் 2ஆவது திருமணம் நடந்துச்சு ? திமுக எம்எல்ஏ ட்வீட்டும் ஹெச்.ராஜாவின் பதிலும்...!

  முத்து   | Last Modified : 20 Jan, 2020 10:55 am
h-raja-reply-for-dmk-mla-j-anbazhagan-tweet

துக்ளக் பத்திரிகையின் 50- வது ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 14 ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், 'பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது, அந்த சிலைகளுக்கு செருப்பு மாலை போடப்பட்டது' என்றும் பேசினார்.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் ரஜினி மீது பல்வேறு காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஜினியின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டார்.

ரஜினி பொண்ணுக்கு இரண்டாவது கல்யாணம் யாரால் ஆச்சு.? தன் குடும்பத்துக்கே சீர்திருத்தம் செய்தவர் பெரியார், என குறிப்பிட்டிருந்தார்.  

இதற்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா, மறுப்பு தெரிவித்துள்ளார். அதாவது 'இந்து பெண்கள் மறுமண சட்டம் வந்தது 1856 - ல், ஆனால் ஈவேரா பிறந்ததோ 1879 - ல் அப்படியிருக்கையில் திமுக பரப்பும் பொய்யை பாருங்கள்' என்று தனது ட்விட்டர் பக்கத்தில்.

இருவரின் பதிவுக்கு கமாண்ட் பகுதியில் இரு கட்சியினரும் மாறி மாறி சண்டையிட்டு கொண்டனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close